Tuesday, 13 November 2018

சுடுசோறு

சுடு சோறு சாப்பிடுவது அலாதியான பிரியம் சிலருக்கு...

சூடு என்பதுக்கு இணை இங்கு வேறு எதுவும் கிடையாது...

சுட சுட இட்லி
சுட சுட சட்னி
சுட சுட சாப்பாடு
சுட சுட செய்தி
சூடு பிடிக்கும் விளையாட்டு
சூடு பிடிக்கும் வியாபாரம்
சூடான சிகரெட்
சூடான சரக்கு
சூடான சுளுக்கு
சூடான காதல்
சூடான கலவி
சூடான பலவிசயம்

இப்படி அனைத்தும் சூடு நிறைந்த வாழ்க்கை..
சூட்டுக்கு என்று இங்கு ஒரு வாழ்க்கையே இருக்க சூடு சுரனையற்ற ஒரு வாழ்க்கை எதற்காக...

சூட்டை தணிப்பதற்காக...
சூட்டை தணிக்கும் வாழ்க்கையே உறைந்து நிற்கும்...

எரிமலை உமிழும்..
எவரெஸ்ட் உயரும்...

நான் சீறும் எரிமலையல்ல...
சினுங்கும் எவரெஸ்ட்...

#யுவன் முத்தையா மனோகரன்

Monday, 12 November 2018

Yuvan Muthaiya Manoharan

YUVAN MUTHAIYA@MANOHARAN

A creative and trained film maker with 5 years’ experience in directing adds films and script writing. Strong ability to multitask confidence in leading project teams (story board designing, assistant director, cast and crew maintenance) and working well under pressure, Proficient at managing creative projects .

http://www.twitter.com/YuvanMuthaiya

http://www.facebook.com/YuvanMuthaiyaa

http://www.yuvanmuthaiya.blogspot.in

http://www.youtube.com/YuvanMuthaiya


Saturday, 10 November 2018

வாழ்க்கை என்பது என்ன..? வாழும் காலம் என்பது எவ்வளவு...?

இரு உடல் இருகி இன்பத்தின் ஊற்றாய் வெளிவரும் மெமரி சிப் தான் நாம்... பல நம் வழி வந்த மூதாதையரின் நிறைவேறாத ஆசைகளை தீர்த்துக்கொள்ள அவதரித்த ஆத்ம உடல் தகப்பன் வழி தாயை சென்றடைந்து பத்து மாதம் பல பரிமாணம் அடைந்து நம் மூதாதையர்களின் முக்கிய ஆற்றல்களை பெற்று மூளைவளர்ந்து தாய் தந்தையரின் நிறைவேறாத ஆசைகள் அடங்கிய இதயம் பெற்று இப்படி கண் காது மூக்கு பெற்று முளைத்து வெளிவந்து முலைப்பால் பருகி முன்னுக்கு பின் முரண்பாடு நிறைந்த இந்த மூன்றாவது கோளில் மூளையில் முளைத்த இதயத்தில் சுமந்த அத்தனை ஆற்றல்களையும் மறந்து மாசுற்று மதிகெட்டு மண்ணுக்கு செல்லும் அற்ப உயிரி நாம்...

வாழும் காலம் என்பது வகை வகையாக மாறுபடுகிறது. இரு உடல் இணையும் தருவாயில் இறங்கிய மெமரி சிப் மெமரி இழந்து வளர்ந்து வாழும் சூழ்நிலைக்கு தன்னை உட்படுத்தி தறிகெட்டு திரிந்து சுக போக வாழ்க்கையில் தன்னை சிக்கி சீர்குலைத்து தன்னால் முடிந்த ஒரு மெமரி சிப்பை இந்த அவணியிலே அவதரிக்க வைத்து மறைகிறது....

அதில் சில வகை மெமரி சிப்கள் மட்டும் தன்னிலை உணர்ந்து செயற்கரிய செயல்கள் செய்கின்றன...

இப்படிப்பட்ட மெமரி சிப்களே மேன்மை அடைந்து வரலாற்றை சுமந்து பல வாரிசுகள் கடந்த வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடிகண்டு பிடிக்கின்றன...

பொதுவாக வாழ்க்கை 60 ஆண்டுகாலம் இறந்த பிறகு ஒரு 60 ஆண்டுகாலம் அதுவே கொஞ்சம் அதிகம்தான்... பிறகு படமாகி நமக்கு பிறகு நம் வழிவந்த மெமரி சிப்களின் மெமரி உள்ள வரை வாழும் எனலாம்... வாழ்க்கை என்பது வெறும் மரணத்தோடு முடிவது அல்ல...

இந்த வாழ்க்கையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழும் நிலைக்கு வழிவகை செய்ய முடியும் என்பதை பல மெமரி சிப்கள் செய்து முடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலேயும் இன்னும் மெமரியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...

அத்தைகைய வாழ்க்கை எங்கு இருக்கிறது...எங்கு கண்டுபிடிப்பது என்றெல்லாம் ஐயம் தேவை இல்லை...

அது இன்றும் நம் மெமரியில் ஒழிந்து கொண்டு இருக்கிறது அதை தேடி கண்டுபிடித்தால் நாமும் மெமரபுல்(memorable) வாழ்க்கை வாழலாம்...

என்ன...அந்த மெமரி சிப் மூன்றாம் கோளில் உள்ள பல அழுக்குகள் சூழ்ந்தமையால் சுத்தம் செய்வது கடினமே... ஆனால் முறையான முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே...

மூன்றாம் கோளின் அழுக்குகள் இருநூறு ஆண்டுகாலம் உயர்ந்து நிற்கிறது... அந்த அழுக்குகளை சுத்தம் செய்து அந்த சிப்பை இயங்க வைத்து முட்டி உடைத்து மூன்றாம் கோளில் முன்னூறு ஆண்டுகாலம் உயர்ந்து நிற்கும் ஆற்றல் உடைய மெமரி சிப்பாக மாற்றினால் வாழும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருக்கும் அழிவு இல்லாத வாழ்க்கை அர்த்தம் ஆகும்...

அப்படி பட்ட வாழ்க்கை வாழ தன்னம்பிக்கை எனும் இதயமும் தொடர்ந்து முயற்சி செய்கிற மூளையும் வாய்க்க பெற்ற மெமரி சிப்களே நாம்...

மரணிக்கும் வாழ்க்கை என்று ஒன்று இல்லை சில மெமரி சிப்களுக்கு மட்டுமே...பல மெமரி சிப்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன...

அழியாத மெமரிசிப் களை உருவாக்கும் பணியே உன்னதம் ஆனது...அத்தகைய அழியாத மெமரிசிப் களை உருவாக்கும் பணி என்பது நம் ஒவ்வொருவர் உள்ளும் புதைந்து உள்ளது... முடிந்தால் முயற்சி செய்யுங்கள்... புது வரலாற்றை உருவாக்கலாம்...

இப்படிக்கு,
அழியாத மெமரி சிப்(விந்து)
(Immortal sperm)

#யுவன்முத்தையாமனோகரன்.
#Mu.Manoharan

www.facebook.com/yuvanmuthaiya  www.facebook.com/yuvandirector  www.twitter.com/yuvanmuthaiya

Saturday, 25 August 2018

சராசரி மனிதன் Vs சாதனை மனிதன்

சராசரி மனிதனுக்கும் சாதனை மனிதனுக்கும் நூலளவு தான் வித்தியாசம்...

ஆம் நூல் அளவு வித்தியாசம்...

சராசரி மனிதன் தன் உண்டு தன் உறவுண்டு என்று தனக்கான சுய போகங்களை அனுபவித்து ஒரு சிலருக்கு உதவிசெய்து சுய சிந்தனையில் வாழ்ந்து இடை நூலளவு புகழ் பெற்று வீழ்ந்து மாய்வான்...

சராசரி மனிதனின் வாழ்க்கை இடை நூலளவே... ஆனால்...

சாதனை மனிதன் தன் உண்டு தன் உறவுண்டு என்று இல்லாமல் தானும் வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் நெகிழ்வோடு வாழவைத்து தன் இடரையும் தன் வாழ்வையும் தொலைத்து சுய சிந்தனையில் சில பொது சிந்தனை கலந்து வாழ்ந்து இடை இயற்றிய நூல்களில் வளம் வந்து வீழ்ந்து மாய்ந்தாலும் வாழ்வான் வரலாறு சொல்ல...

சராசரி மனிதனுக்கும் சாதனை மனிதனுக்கும் நூலளவு தான் வித்தியாசம்...

ஆம் நூல் அளவு வித்தியாசம்...

#yuvanmuthaiyamanoharan

Thursday, 16 August 2018

யாரும் அறியாதது

எத்தனிக்கும் நினைவுகளின் 
நிழல் விழுகின்ற 
பக்கங்களில் 
பூக்காத எழுத்துக்கள்...
பெயர் தெரியாத 
மடல்களுடன் 
இனியும் எழுதாமல்...
மூடி வைத்து 
ரசிக்கப்படும் நாட்குறிப்பவள்...
பார்த்தது இல்லை...
பழகியது குறைவு...
ஆனால் பலநாள் பழகிய கணம்...
கற்பனையில் வந்த கவிதையல்ல- அந்த
கற்பனை கவிகளுக்கு உயிர் கொடுக்கும் தாயவள்...
கடவுளின் வரம் அவள்...
காலம் தந்த பரிசு...
உயிருக்குள் இருக்கும் உயிர்
யாரும் அறியாதது...

Wednesday, 15 August 2018

கிராம சபை


அதிகாரிகளே தரையில்தான் அமரவேண்டும்... அதென்ன?
கிராம சபை - ஒரு சிறப்பு பார்வை!

கிராம சபை என்றால் என்ன?

73வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1993ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாக கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

கிராம சபை கூட்டம் எப்பொழுது?

கிராம சபை கூட்டம், இந்திய குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), இந்திய சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நான்கு சிறப்பு நாட்களில் நடக்கிறது.

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் கிராமத்தைச் சார்ந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

முக்கிய அம்சங்கள் :

உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து தலைவரே, கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர், கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாதபோது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.

கிராம சபை கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதபோது நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறொரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும், எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

இயல்பான வாக்கியங்களை கொண்டே கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.

கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

கிராம சபை தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. அதிகாரிகளே ஆனாலும் கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும்.

கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கப்படும்.

பக்கத்து ஊர் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். மற்றொரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.

விழிப்புணர்வு தேவை :

பல கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடப்பதே மக்களுக்கு தெரிவதில்லை. பல நேரங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதும் இல்லை. முறையான அறிவிப்பு கொடுத்து கிராம சபை கூட்டங்கள் பற்றி மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். இந்த திட்டங்களில் முக்கியத் தீர்மானங்களாக நீர்நிலைகளை தூர்வாருதல், குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபான கடைகளை மூடுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமாக நாம் வாழ.. சண்டையிட்ட உறவுகளுக்கு நன்றி !! 🙏 🙏


சுதந்திரமாக நாம் வாழ.. சண்டையிட்ட உறவுகளுக்கு நன்றி !! 🙏 🙏

சுதந்திர தின வாழ்த்துக்கள் !

ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நினைவில் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், 'நம் தேசத்தின் விடிவெள்ளி" என்று சொன்னால் அது மிகையாகாது.

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தினநாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று நம் நாட்டின் 72வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளான இன்று, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவு கூறுவோம்...!

மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் 'விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.


ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.

'நேதாஜி" என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!" என தீர்மானித்து ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.

பாலகங்காதர திலகர் இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் ஒருவர். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர். 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை" என கருதப்படுபவர்.

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்.

சுப்பிரமணிய பாரதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.

தேசியக் கொடியின் மூவர்ணங்கள்

காவி - தைரியத்தையும், தியாகத்தையும் குறிக்கும்

வெள்ளை - அமைதி, உண்மை, தூய்மை

பச்சை - செம்மை, நம்பிக்கை, வீரத்தைக் குறிக்கின்றன.

அசோகச் சக்கரம் - நீதியைக் குறிக்கும்.

நாம் துயரின்றி வாழ சிலர்

இன்பத்தை துறந்தார்கள் !

அவர்கள் இன்பத்தை துறந்ததால்

இன்று நாம் துயரின்றி வாழ்கிறோம் !

அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை

அன்போடும், பண்போடும், புகழோடும்

போற்றுவோம்!

நீங்கள் இறைவனை வணங்கும் முறை சரியா?

நீங்கள் இறைவனை வணங்கும் முறை சரியா? தவறா? தெரிஞ்சுக்கோங்க...

🌟 நம் முன்னோர்கள் நமக்காக அளித்துச்சென்ற பல எளிய செயல்களில் உள்ள அறிவியலை உணராமல் அந்நிய நாட்டு மோகத்தால் நாம் இழந்தவைகள் எண்ணில் அடங்காதவை. விவசாயம், கல்வி என அனைத்திலும் நம் பாரம்பரிய முறைகளை புறக்கணித்தது மட்டுமல்லாமல் நம் ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களிலும் மேலை நாட்டு மோகத்தை பின்பற்ற தொடங்கியுள்ளோம்.

🌟 நம் முன்னோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வயதில் பெரியவர், சிறியவர் என எவரைக் கண்டாலும் இரு கைகளை கூப்பி வணக்கம் என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய நிலையோ வேறு. நாம் யாரைக் கண்டாலும் இரு கைகளை இணைத்து வணக்கம் கூறாமல், மாறாக நாமும் அவரும் கைக்குலுக்கி கொள்வதே உயர்ந்த மரபு என்று நினைக்கின்றோம்.

🌟 அந்த உயர்ந்த மரபில் உள்ள விளைவுகளை பற்றி யாரும் அறிவதில்லை. இதில் என்ன விளைவு உள்ளது என நினைக்கிறீர்களா?

🌟 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒளிவட்டம் உள்ளது. நம் வீட்டில் உள்ள இறைவனின் வரைபடங்களில் அவரின் தலைக்கு பின்னே உள்ள ஒளிவட்டம் போன்று சூட்சம நிலையில் இருக்கும். அந்த ஒளிவட்டம் ஆறா என்று அழைக்கப்படுகின்றது. நாம் கைக்குலுக்கும்போது நமது கைகள் மட்டும் இணையாமல் அவரவர்களின் ஒளிவட்டம் எனப்படும் ஆறாவும் இணைக்கின்றது. ஒருவரின் ஆறாவானது மற்றவர்களை தொடும்போது அவர்களின் ஆறாவினால் நமது ஆறாவும், அவர்களின் ஆறாவும் சலனப்பட்டு பாதிக்கப்படுகின்றது.

🌟 இருவரின் ஒளிவட்டங்களான ஆறா பாதிக்கப்படுவதை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் இதை தவிர்க்கும் விதமாக வணக்கம் செலுத்தும் முறையை அனைவரிடத்திலும் அக்காலத்தில் கொண்டு வந்தார்கள்.

வணக்கம் = வா   + இணக்கம்

🌟 தங்களின் வருகையையும், அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதே இதன் உட்பொருளாகும். இனி வணக்கம் செலுத்தும் முறையை பற்றி காண்போம்.

🌟 நம்மையும், இந்த பிரபஞ்சத்தையும் படைத்த அனைவருக்கும் மேலான இறைவனை வணங்கும்போது நம்முடைய கைகளை சிரசின் மேல் உயர்த்தி வணங்க வேண்டும்.

🌟 நம்மை நெறிப்படுத்தவும், நல்லது கெட்டது என பிரித்து பார்க்கக்கூடிய பகுத்தறிவையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியரை (குருவை) வணங்கும்போது இரு கரங்களை நெற்றிக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.

🌟 நாம் பிறப்பதற்கு காரணமான தந்தையையும், நம்மை வழிநடத்தி செல்லும் வேந்தனையும் வணங்கும்போது முகத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 மதியால் உயர்ந்த சான்றோர்களை வணங்கும்போது சிரம் தாழ்ந்து மார்புக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.

🌟 வயதில் சிறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விருந்தினரை வணங்கும்போது இதயத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 நமக்கு தொப்புள் கொடி மூலம் உணவையும், உயிரையும் கொடுத்து நம்மை பெற்றெடுத்த அன்னையை வணங்கும்போது தொப்புள் கொடிக்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.

🌟 இதுவே, நம்முடைய முன்னோர்கள் வணங்கிய முறைகள் ஆகும். இதுவே நம்முடைய அடையாளமும், மரபும் கூட.

🌟 ஆகவே, இன்று முதல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்து யாருடைய ஒளிவட்டத்தையும், பாதிக்காமல் அனைவரும் இருகரம் கூப்பி அன்போடு வணங்குவோம்!!..

Tuesday, 14 August 2018

சுதந்திர தின சிறப்பு கவிதைகள்


துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்...

ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்...

மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்...

சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்...

சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்...

திக்கு கால் 
முளைத்து சாதி ஆனதோ...

மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?

இதுவாசுதந்திரம்?

சாதியா நம்
ஒருமைப்பாடு?

மதமா நம்
ஒற்றுமை?

உண்மை தான் 
நம் பண்பு..!

உழைப்பு தான் 
நம் தெம்பு..!

அன்பு ஒன்று தான் 
நம் பிணைப்பு..!

இனிய 72ம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

Wednesday, 8 August 2018

பட்டியல் நீளும்...

பொதுவாக எனக்கு சினிமா சிறுவயது முதலே ஆர்வம்... அதைபோன்று அரசியல் நாட்டம் இல்லை என்றாலும் அரசியல் பேச்சில் நாட்டம் உண்டு... காரணம் எனக்கு வாய்த்த சூழல் உண்டு... காரணம் என் சக வயது நண்பர்களிடம் அதிகம் பழகியது இல்லை... ஒன்று என்னை விட வயது மூத்த நண்பர்கள் அல்லது என்னை விட இளம் வயதுகாரர்கள்... என்னை பெற்றெடுத்தவர்களை விட பேணி வளர்த்தவர்களே என்னை இப்படி பட்ட சூழலுக்கு வர வைத்து இருக்கும்... அப்படி பேணி காத்தவர்களில் முதல் இடம் என் தாய் தந்தையர்... அடுத்த பெரியாரால் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கையை விட்டு மாறி திராவிட கொடியை எரித்து சிறைசென்று பெரியாரால் ராவணன் என்று பெயர் சூட்டி விடுதலை பெற்ற கலியமூர்த்தி தாத்தா,அவரை சார்ந்து என்னை வளர்த்த என் மாமா... எதிர் வீட்டு ராமுதாத்தா(நாடக கலைஞர்) இங்குதான் ஆனந்தத்தை உணரமுடியும்... அன்பை அப்படி பரிமாரி பழகும்  அதிசயம் நிறைந்த நாங்கள் நடிப்பு பழகி இசைபழகி இன்னும் எவ்வளவோ... எங்களுக்கென்றே இசைபெருக்கி (பானைக்குள் புதைந்த) ஒலி எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கும்... தொலைகாட்சி காத்துக்கொண்டே இருக்கும்...  அங்குதான் எனக்கு ஒரு உந்து சக்தியே கிடைத்தது... காரணமாக இன்றும் எனக்கு ஒரு மாடலாக இருக்கின்ற மாமா @சிவக்குமார், கலையார்வம் கொண்ட செந்தில் மாம்ஸ்,(பட்டியல் நீளும்.....) சினிமாவே கெதியென்று திரிந்து தினமும் படம் பார்த்து திரியும் நண்பர்களோடும்,உறவினர்களோடு மற்றும் வளர்ந்தாலும் நல் ஆசிரியர்கள் அதிகம் பட்டை தீட்டினார்கள்... இது சினிமா(பட்டியல் நீளும்.....)

இனி அரசியல் சிறு வயதில் பாதித்த அரசியல் திரு.இராஜீவ் அவர்கள் இறப்பு அதை சார்ந்த அரசியல்.... அடுத்து செல்வி.ஜெயலலிதா அவர்கள் வருகை மகா மக விபத்து அவரை பற்றிய தெளிவு, அப்புறம் என் வளர்ச்சி, நான் வளர்ந்த பகுதியில் இருந்த கட்சிக்காரர்கள் அவரவர் பாவனை பேச்சுக்கள், அவர்களின் அரசியல் உரையாடல் என ஒருபுறம்... திரு.இராம.இராமநாதன் MLA, திரு.கோசி.மணியார், சாக்கோட்டை திரு.அன்பு அண்ணா, என எத்தனையோ பேரின் அரசியல் பிராச்சாரம் அந்த சமயத்தில் அவர்களுக்காக வந்த எத்தனையோ பேரின் பேச்சுகளை அறியா வயதில் வியந்து கேட்டு ஆயத்தொடங்கினேன்... இலக்கியத்தை மட்டும்.... அன்று நான் வியந்து நோக்கும் முதல் ஆள் இல்லை எனக்கு முன்பு ஒரு ஊரே முண்டியடித்து கொண்டிருக்கிறது... அப்படி ஒரு குரல் ஆடிக்கொண்டு இருந்தேன்... என் தாத்தாவின் தோளில் உட்கார்ந்து, பலர் நெருக்கி தள்ளி ஆரவாரித்த அந்த சிம்மக்குரல் அய்யா கலைஞர் அவர்களின் குரல்... அதன் பிறகு திரு.வை.கோ,திரு.காடுவெட்டியார்,திரு.ஸ்டாலின்,திரு.திருமா, என சிலரின் பேச்சுகள் என் சிறு வயதில் கேட்டாளும் இவர்களின் அரசியல் பற்றியும் தெரியாது... அனுபவமும் கிடையாது... அரசியல் தெரிந்த அரசியலில் வாழும் தெருபகுதி ஆட்கள் கூட அந்த அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியும் தெரியப்படுத்தாதன் விளைவு கூடவே வளர்ந்தும் விட்டேன் பள்ளி தீ விபத்து பார்க்காத அனைத்து தலைவர்களையும் மிக அருகில் இருந்து பார்த்துவிட்டேன்... இப்போது நான் கற்ற அரசியல் யாரோ ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க வைத்தது...அந்த தலைவன் மனதுக்குள்ளே வாழ்ந்தார் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் தலைவனாக அல்ல....நல் மனிதனாக... அப்போது புது ரத்தம் புது சத்தத்தோடு ஒரே தலைவன் வந்தான் தலைவனையே நம்பினேன் எனக்கு அங்கு சிறுவயதிலேயே முன்னுரிமை தரப்பட்டது... ஆனால் அதுவும் சில போலி பரப்புரைகளே... மீண்டும் ஒரு தலைவன்!! என்னடா இது...? நாய் வாய் வைப்பது போல் என்றுள்ளதா...? ஆம் இது எல்லாம் அரசியல் கற்றுக்கொள்ளும் ஆர்வம்... ஆனால் இது எல்லாம் அரசியல்வாதி ஆக அல்ல... மக்களுக்கு நல்ல அரசியல் படம் எடுக்க..., மூன்றாவது தலைவனும் போய்விட்டார்... இது எல்லாம் முடிந்தது என் கல்லூரி வாழ்க்கை முடிந்து இரண்டாண்டு... இன்றோடு 11ஆண்டுகள்.... இதுவரை அரசியல் (பட்டியல் நீளும்) இனி சினிமா...

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல்  பல துரோகம் இழப்பு என வாழ்ந்தாலும் மனதில் மறையாத சினிமா கடந்த நான்கு ஆண்டுகளாய் என் ஜீவனாக உயிர்பிக்க காரணம் பல அடி... அடியாள் பல தேடல்கள்... தேடலால் அறிவு.... இன்று வரை ஒரு புது நம்பிக்கை...வென்று விடுவேன்... இதற்கும் காரணம் சில மானசிக குருக்கள் சினிமா பேசும் சசி அண்ணா முருகன் அண்ணா இயக்குனர் இராஜசூரியன் கார்த்திக் நண்பர்கள் (பட்டியல் நீளும்)...இதுவரை சினிமா(பட்டியல் நீளும்) இனி அரசியல் ...

திராவிடம் பேசும் இரமேஷ் அண்ணா இவரை போன்றோர் இருந்தால் ஒரு அரசியல் தலைவனை அந்த நிமிடமே ஒருவர் அடையமுடியும்... 60ஆண்டுகால அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர்... திராவிட முன்னேற்றக் கழகம் இடைவிடாது நேசிப்பவர்... என்னையும்... கடந்த நான்கு ஆண்டுகளாக அவரிடம் கற்று தெரிந்தது ஓகடுகளவே... ஆனால்  மலைக்கும்... அவரை நேசித்தேன் காரணம் அவர் சார்ந்த தலைவனை பற்றி ஒருநாளும் புகழாது படுக்கும் வழக்கம் இல்லை... அண்ணன் நேசித்த சுவாசித்த தலைவனே எனக்கும் இனி என்றைக்கும் தலைவன்....

அத்தலைவனே இனி என்றும் எப்போதும்....
திரு.அய்யா கலைஞர் அவர்கள் தான் இனி என் தலைவன்....

சுடுசோறு

சுடு சோறு சாப்பிடுவது அலாதியான பிரியம் சிலருக்கு... சூடு என்பதுக்கு இணை இங்கு வேறு எதுவும் கிடையாது... சுட சுட இட்லி சுட சுட சட்னி சுட ச...